ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உலகில் அதிகம் சம்பாதிக்கும் 100 பேர் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு 86-வது இடத்தில் இருந்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இந்த ஆண்டு 65வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இந்திய அளவில் கடந்த ஆண்டு 3வது இடத்தில் இருந்த ஷாருக்கான், இந்த ஆண்டு சல்மான்கானை பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் இடத்திற்கு வந்திருக்கிறார்.
ஷாருக்கானுக்கு இணையாக சம்பாதிக்கும் நடிகையாக ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். முதல் இடம் அமெரிக்க பாப் பாடகர் சீயன் காப்ஸ்சுக்கும், 2வது இடம் பியான்ஸ் என்ற அமெரிக்க நடிகைக்கும், 3வது இடம் ஹாரிபார்ட்டர் கதாசிரியர் ஜே.கே.ரவ்லிங்கிற்கும், 4வது இடம் கனடா தயாரிப்பாளர் டிரேக்கிற்கும், 5வது இடம் கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கும் கிடைத்துள்ளது. போர்ப்ஸ் பட்டியலில் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து இடம்பெற்று வரும் ஒரே பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.