Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தங்கல் - இந்தியாவை விட சீனாவில் அதிக வசூல்?

18 மே, 2017 - 17:59 IST
எழுத்தின் அளவு:
Dangal-China-collection-breaks-india-collection

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ஆமீர்கான் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளிவந்த 'தங்கல்' படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தியாவில் மட்டும் இந்தப் படம் சுமார் 380 கோடி ரூபாயை வசூலித்தது. உலகம் முழுவதும் சுமார் 700 கோடி ரூபாயை வசூலித்து 'பாகுபலி 2' படம் வெளிவரும் வரை முதலிடத்தில் இருந்தது.


கடந்த மாதம் 28ம் தேதி வெளிவந்த 'பாகுபலி 2' படம் இந்திய அளவில் வசூலில் முதலிடத்தைப் பிடித்து வைத்திருந்த 'தங்கல்' படத்தின் வசூலை முறியடித்து 400 கோடி ரூபாயைக் கடந்தது. தற்போது 500 கோடி ரூபாயை நோக்கி இப்படத்தின் வசூல் போய்க் கொண்டிருக்கிறது.


இதனிடையே, சீனாவில் வெளியான 'தங்கல்' படம் நல்ல வசூலைப் பெற்று வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் முறையாக ஒரு இந்தியப் படம் சீனாவில் 500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். இதன் மூலம் 'தங்கல்' படத்தின் வசூல் இந்திய வசூலான 380 கோடி ரூபாயையும் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது.


உலக அளவில் 'பாகுபலி 2' படம் 1500 கோடியை நெருங்கியுள்ள நிலையில், 'தங்கல்' படத்தின் சீனா வசூலையும் சேர்த்தால் அந்தப் படம் 1200 கோடியைத் தற்போது தாண்டியுள்ளது.


'பாகுபலி 2' படம் இன்னும் சீனாவில் வெளியாகவில்லை. இந்த வருடக் கடைசியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், 'பாகுபலி' முதல் பாகம் சீனாவில் வெளியான போது பெரிய வசூலை ஈட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
சித்திக் எங்கே இருக்கிறார்: தேடுகிறார் சல்மான்சித்திக் எங்கே இருக்கிறார்: ... கங்கனா மீது 'சிம்ரன்' கதாசிரியர் புகார்..! கங்கனா மீது 'சிம்ரன்' கதாசிரியர் ...


வாசகர் கருத்து (3)

Arivalagan Velayutham - Jeddah,சவுதி அரேபியா
19 மே, 2017 - 09:48 Report Abuse
Arivalagan Velayutham பாஹுபலி 2 2000 கோடி வசூலுன் சொல்லி இருந்த அதையும் தாண்டி சொல்லி இருப்பானுக...
Rate this:
Sampath - Shanghai,சீனா
19 மே, 2017 - 05:53 Report Abuse
Sampath This is a great lie, Chinese people never use to watch more than Indians. May be in Hong Kong a little mass be there, that also due to Indian Hong Kong residents.
Rate this:
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
19 மே, 2017 - 04:41 Report Abuse
என்னுயிர்தமிழகமே புரியுது சீனா அரசாங்கம் தங்களுக்கு விருதே கொடுக்கும் , பாகிஸ்தானும் விருது கொடுக்கும், இல்லையா அமீர் ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Thana Cherenda Kootam
    Tamil New Film Vivegam
    • விவேகம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : காஜல் அகர்வால் ,அக்ஷரா ஹாசன்
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Mask
    Tamil New Film Yen Intha Mayakkam

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in