ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோயின் தோழியாக நடித்து ஹீரோயின் ஆவது மிகவும் கடினமானது. ஒரு சிலரே அப்படி ஆகியிருக்கிறார்கள். த்ரிஷா ஹீரோயின் தோழியாக நடித்து ஹீரோயின் ஆனவர், அதன்பிறகும் சிலர் ஆகியிருக்கிறார்கள். சமீபத்தில் ஆனவர் தீக்ஷிதா மாணிக்கம்.
சென்னையை சேர்ந்தவரான தீக்ஷா, கம்ப்யூட்டர் சயின்சில் பட்டம் பெற்று விட்டு அதன் பிறகு மாடலிங் துறைக்கு வந்தார். 2012ல் நடந்த மிஸ்.சவுத் இந்தியா போட்டியில் பைனல் வரைக்கு வந்து டைட்டில் மிஸ் பண்ணியவர். அதன் பிறகு விளம்பர படங்கள் பக்கம் கவனம் செலுத்தினார் அதன் மூலம் திருமணம் என்னும் நிக்காஹ், ஆகம் படங்களில் ஹீரோயின் தோழியாக நடித்தார். அதன்பிறகு இப்போது நகர்வலம் படத்தின் ஹீரோயின் ஆகிவிட்டார்.
"சினிமா பின்னணி இல்லாத குடும்பத்திலிருந்து நடிக்க வந்திருக்கிறேன். பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்திருக்கிறேன். கடுமையான போராட்டத்திற்கு பிறகுதான் சினிமாவில் நடிக்க அனுமதி கொடுத்தார்கள். அதனால் குடும்பத்தோடு பார்க்கும் விதமான படங்களில் மட்டுமே நடிப்பேன். கிளாமராக நடிக்க மாட்டேன். நல்ல கதை, நல்ல கேரக்டர் அமைந்தால் மட்டுமே நடிப்பேன். நடிப்பு மட்டுமில்லாமல் காஸ்ட்யூம் டிசைனிங், இயக்கம் ஆகியவற்றின் மீதும் ஆர்வம் இருக்கிறது" என்கிறார் தீக்ஷிதா மாணிக்கம்.