ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாலிவுட்டின் பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அங்கித் திவாரி. கடந்த 2014-ம் ஆண்டு பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக இவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் அங்கித் திவாரியை குற்றவாளி அல்ல என்று கோர்ட் விடுதலை செய்துள்ளது. இதுகுறித்து அங்கித் மகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது... உண்மை எப்போதும் ஜெயிக்கும் என நம்பிக்கை கொண்டிருந்தேன். இந்த வழக்கில் தீர்ப்பு காத்திருந்தேன், தற்போது நல்ல தீர்ப்பு வந்துள்ளது'' என்று கூறியுள்ளார்.