ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமா பிபரலங்கள் சினிமாவில் நடித்து கல்லா கட்டுவதை விட விளம்பர படங்களில் நடித்து தான் அதிகம் கல்லா கட்டி வருகின்றனர். டாய்லெட் தொடர்பான விளம்பரத்தில் தொடங்கி கார் விளம்பரம் பல விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். ஆனாலும் ஒரு சில நடிகர்கள், விளம்பர படத்தில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருக்கத்தான் செய்கிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் நடிகர் அபே தியேல், அழகு சாதன பொருட்கள் தொடர்பான விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்களை விமர்சித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தச்சூழலில் நடிகர் ரன்பீர் கபூரை தேடி ஒரு அழகு சாதன நிறுவனம் ஒன்று விளம்பரத்தில் நடிக்க கேட்டும், அதற்கு ஈடாக ரூ.9 கோடி தருவதாகவும் ஆசை காட்டியுள்ளது. ஆனால் ரன்பீர் கபூரோ அந்த விளம்பரத்தில் நடிக்க முடியவே முடியாது என்று மறுத்துவிட்டாராம். ரன்பீர் ஒன்றும் விளம்பர படங்களில் நடிக்காதவர் கிடையாது, ஏற்கனவே நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்த அழகு சாதன விளம்பரத்தில் மட்டும் அவர் ஏன் நடிக்க மறுத்தார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. ஒருவேளை நடிகர் அபே தியோலின் விமர்சனத்தை ஏற்று நடிக்க மறுத்துவிட்டாரோ என்னவோ...? அவருக்கே வெளிச்சம்!