பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீதிவ்யா. அதன்பிறகு ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, ஈட்டி, காஷ்மோரா என பல படஙக்ளில் நடித்தவர், தற்போது சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தை முடித்து விட்டு, அதர்வாவுடன் ஒத்தைக்கு ஒத்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில்,நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டார் ஸ்ரீதிவ்யா.
அப்போது ஸ்ரீதிவ்யாவின் நடிப்பு குறித்து பெருமையாக பேசிய அப்பட தயாரிப்பாளரான டைரக்டர் அட்லி, எனக்கு ஸ்ரீதிவ்யாவின் நடிப்பு ரொம்ப பிடிக்கும். அதனால்தான் எனது படத்தில் நடிக்க அவரிடம் கால்சீட் கேட்டேன். ஆனால் அவர் அதே தேதியில் வேறு படத்தில் கமிட்டாகியிருந்ததால் என் படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டது. என்றாலும் எனது தயாரிப்பில் நடித்து விட்டார் என்றார்.
ஆனால், எந்த படத்தில் கால்சீட் இல்லாமல் ஸ்ரீதிவ்யா நடிக்கவில்லை என்பதை அட்லி கூறவில்லை. அதுகுறித்து ஸ்ரீதிவ்யா தரப்பை கேட்டபோது, விஜய்யின் 61வது படத்தில் வயதான விஜய்க்கு ஜோடியாக நடிக்கயிருந்த ஜோதிகா கடைசி நேரத்தில் விலகியதைத் தொடர்ந்து, பல நடிகைகளிடம் கால்சீட் கேட்டாராம் அட்லி. அதில் ஸ்ரீதிவ்யாவும் ஒருவராம். ஆனால் அவர் கேட்ட தேதியில் அதர்வாவுடன் ஒத்தைக்கு ஒத்த படத்தில் நடிக்க கால்சீட் கொடுத்திருப்பதாக கூறி விட்டாராம் ஸ்ரீதிவ்யா. அதன்பிறகுதான் நித்யாமேனனை ஒப்பந்தம் செய்தாராம் அட்லி.