ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி, கர்ஸா என்டர்டைன்மெண்ட் சார்பில் ஆர்.எஸ்.கார்த்திக் மற்றும் பிஜி.மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிஜி.முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் பீச்சாங்கை. ஏலியன் ஹாண்ட் சின்ட்ரோம் எனப்படும் ஒரு வித குறைபாட்டை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் இந்த படத்தில் கார்த்திக் மற்றும் அஞ்சலி ராவ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான பீச்சாங்கை படத்தின் டிரைலருக்கு 15 லட்சத்திற்கும் அதிகமாக பார்வையாளர்களை யுடியூபில் கடந்திருக்கிறது.
இப்படம் பற்றி ஹீரோ கார்த்திக் கூறியதாவது... "இடது கை பழக்கம் உள்ள ஒரு பிக்பாக்கெட் திருடன் வேடத்தில், நான் இந்த பீச்சாங்கை படத்தில் நடித்து இருக்கின்றேன். நான் நடித்திருக்கும் இந்த கதாபாத்திரத்தின் பெயர் ஸ்மூது. பீச்சாங்கை படத்தின் கதையை பொறுத்த வரை என்னுடைய இடது கை தான் உண்மையான கதாநாயகன். ஒரு பிக்பாக்கெட் திருடனை ராஜா போல வாழ வைக்கும் அவனுடைய இடது கை, ஒரு கட்டத்தில் அவனுக்கு வில்லனாக மாறுகின்றது. இது தான் எங்களின் பீச்சாங்கை படத்தின் ஒரு வரி கதை. நிச்சயமாக என்னுடைய கதாபாத்திரம், எல்லா தரப்பு ரசிகர்களாலும், குறிப்பாக குழந்தைகளால் ரசிக்கப்படும்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.