ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
30 வயதுக்குட்பட்ட ஆசிய சாதனையாளர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. தொழில், வியாபாராம், விளையாட்டு, சினிமா துறையை சேர்ந்தவர்கள் 300 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவிலிருந்து மட்டும் 53 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் நடிகை ஆலியா பட்டும் ஒருவர்.
குறுகிய காலத்தில் கலைத்துறையில் மிக உயர்ந்த இடத்தை பிடித்தவர் என்கிற அடிப்படையில் இந்த பட்டியலில் ஆலியாபட் இடம்பெற்றிருப்பதாக போர்ப்ஸ் கூறியுள்ளது. ஆலியா தவிர ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கணை தீபா கர்மாகர், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கணை சாக்ஷி மாலிக். பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீச்சல் வீரர் சரத் கெய்க்ட்வாட் உள்ளிட்ட பலரும் இந்த பட்டியிலில் இடம் பிடித்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகரான மகேஷ் பட்டின் மகளான ஆலியா பட் 2012ம் ஆண்டு ஸ்டூடன்ட் ஆப் தி இயர் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படத்திற்காக 4 சிறந்த புதுமுக நடிகை விருது பெற்றார். ஹெவே படத்திற்காக இரண்டு விருதுகள் பெற்றார். இதுதவிர 2 ஸ்டேட்ஸ், உத்த பஞ்சாப், டீயர் ஜிந்தகி படங்களுக்கும் விருதுகளை வாங்கிக் குவித்தார். இப்போது ஆசிய சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.