தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா | தியேட்டர், ஓடிடி… அடுத்து டிவியிலும் வரவேற்பைப் பெறாத 'கேம் சேஞ்ஜர்' | பிளாஷ்பேக்: சவாலுக்கு படம் எடுத்த பாலுமகேந்திரா | பிளாஷ்பேக்: குழந்தை நட்சத்திரமாக நடித்த பத்மா சுப்பிரமணியம் | காதலியுடன் பொது நிகழ்வில் முதல்முறையாக ரவி மோகன் | 'கைதி 2' படத்திற்குப் பிறகு 'ஹிட் 4'ல் நடிக்க உள்ள கார்த்தி | 'ஆபரேஷன் சிந்தூர்' : டிரேட் மார்க் பதிவுக்கான விண்ணப்ப சர்ச்சை | 'ரெட்ரோ' ருக்கு - வாழ்த்தியவர்களுக்கு பூஜா ஹெக்டே நன்றி | லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி |
மனதை திருடிவிட்டாய் படத்தில் பிரபுதேவா ஜோடியாக அறிமுகமானவர் காயத்ரி ஜெயராமன். அதன்பிறகு ஸ்ரீ, ஏப்ரல் மாதத்தில், வசீகரா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். சினிமா மார்க்கெட் குறைந்ததும் தன் கவனத்தை வேறு பக்கம் திருப்பினார். ஆழ்கடலுக்குள் நீச்சல் அடிக்கும் ஸ்கூபா டைவிங் கற்று அதில் மாஸ்டர் ஆனார். அந்தமான் தீவில் அந்த பயிற்சியாளராக பணியாற்றினார். சக பயிற்ச்சியாளரான சமித் ஸ்வானி என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலானார்.
பின்னர் சில காலத்திற்கு பிறகு சின்னத்திரை பக்கம் வந்தார். கிராண்ட் மாஸ்டர், சூப்பர் குடும்பம், அச்சம் தவிர் நிகழ்ச்சிகளின் மூலம் சின்னத்திரையில் வலம் வந்து கொண்டிருந்தவர் இப்போது நந்தினி சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாகியிருக்கிறார். நித்யாராம், மாளவிகா வேல்ஸ் என்ற இளம் நடிகைகளுக்கு போட்டியாக பைரவி கேரக்டரில் நடித்து தனக்கென ரசிகர் வட்டாரத்தை உருவாக்கி வருகிறார். நல்ல கேரக்டர்கள், குறிப்பாக டைட்டில் கேரக்டர் அமைந்தால் தொடர்ந்து நடிக்க காயத்ரி ஜெயராமன் முடிவு செய்திருக்கிறார்.