ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இணையதளங்களில் ஆபாச படங்களை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கொள்வது சில நடிகைகளின் பப்ளிசிட்டி டிரண்டாகியுள்ளது. லண்டன் நடிகை எமிஜாக்சன், இலியானா உள்ளிட்ட பல நடிகைகள் இதுபோன்ற அதிரடி விளம்பரங்களை செய்து வரும் நிலையில், தற்போது பொய் சொல்லப்போறோம், ஏகன், கோவா, கோ, சட்டம் ஒரு இருட்டறை உள்பட பல படங்களில் நடித்த பியா பாஜ்பாயும் செய்யத் தொடங்கியிருக்கிறார்.
சாதாரணமாக தான் நடிக்கும் படங்களிலேயே கவர்ச்சிகரமாக நடித்து வரும் அவர், தற்போது இந்தியில் மிர்சா ஜூலியட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். ரிலீசுக்கு தயாராகி விட்ட இந்த படத்திற்கான பப்ளிசிட்டிகள் பெரிய அளவில் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு வெள்ளை நிற சட்டை அணிந்து முன்பக்க பட்டன்களை போடாத நிலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி எடுத்த ஒரு புகைப்படத்தை இணையதளங்களில் வெளியிட்டிருக்கிறார் பியா பாஜ்பாய்.
அந்த புகைப்படம் மிர்சா ஜூலியட் படத்தில் பியாபாஜ்பாய் நடித்ததா? இல்லை பப்ளிசிட்டிக்காக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டதா? என்பது தெரியவில்லை. ஆனால் அந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.