சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
இயக்குநர் அகத்தியனின் இளைய மகளான விஜயலட்சுமி சென்னை-28 உட்பட சில படங்களில் நடித்தார். ஒரு படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. சமீபத்தில் ஒரு உதவி இயக்குநரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.
கல்யாணத்துக்குப் பிறகு 'டீ டைம் டாக்கீஸ்' என்ற படநிறுவனம் தொடங்கி தன்னுடைய காதல் கணவர் இயக்கத்தில் 'பண்டிகை' படத்தை தயாரிக்க ஆரம்பித்தார். கிருஷ்ணா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ளார். இரண்டு பேருக்குமே மார்க்கெட் இல்லாததினால் பண்டிகை படம் பிசினஸ் ஆகவில்லை. கடைசியில் 'ஆரா சினிமாஸ்' நிறுவனம் பண்டிகை படத்தை வெளியிட முன் வந்தது. அடுத்த மாதம் (மார்ச்) 9-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இப்படத்தின் இச வெளியீட்டு விழா பிப்ரவரி 26-ஆம் தேதி சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை பண்டிகை படத்தின் இசைவெளியீட்டை ரத்து செய்துவிட்டனர்.