ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் தேவ கட்டா இயக்கத்தில் சர்வானந்த், சாய் குமார், சந்தீப் கிஷான் மற்றும் பலரது நடிப்பில் 2010ல் வெளிவந்த பரஸ்தனம் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றி பெற்றது. இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய இயக்குனர் தேவ கட்டா தீவிர ஆர்வம் காட்டினார். தற்போது தேவ கட்டாவின் ஆசை நிறைவேறியுள்ளது. பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பரஸ்தனம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க விருப்பம் காட்டியுள்ளார். சஞ்சய் தத் இப்படத்தை தயாரிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். ஹிந்தி இயக்குனர் ஒமங் குமார் இயக்கத்தில் சஞ்சய் தத் புதிய படமொன்றில் நடித்து வருகின்றார். காற்று வெளியிடை படத்தில் நடிக்கும் அதிதி ராவ் இப்படத்தில் சஞ்சய் தத்திற்கு மகளாக நடிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர் சஞ்சய் தத் இயக்குனர் தேவ கட்டா இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது.