ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வீரர் ராகேஷ் சர்மா. இவரது வாழ்க்கை பாலிவுட்டில் சினிமாவாக உருவாக இருக்கிறது. இதில் ராகேஷ் சர்மாவாக அமீர்கான் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராகேஷ் சர்மாவும் இதை உறுதி செய்திருக்கிறார்.
இதைப்பற்றி ராகேஷ் சர்மா கூறியதாவது.... "என் வாழ்க்கை படத்தில் அமீர்கான் நடிக்கிறார். அவர் தவிர்த்து மற்ற நடிகர்கள் யார் யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. படத்தின் கதையும் இன்னும் முழுமை பெறவில்லை, ஆகையால் என் வாழ்க்கை படம் எந்தமாதிரி உருவாகிறது என்பது தெரியவில்லை. என் வாழ்கை மிகவும் கடினமாக இருந்தது. என் வாழ்க்கையை திரையில் காண ஆவலாய் உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.
ராகேஷ் சர்மா வாழ்கை வரலாற்று படம், அடுத்தாண்டு துவங்கி 2019-ல் ரிலீஸாகும் என தெரிகிறது. சமீபத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் படம், பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.