பீரியட் பிலிமில் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கும் சசிகுமார் | பிளாஷ்பேக்: நடிகராக ஜெயிக்க முடியாத சிவாஜி வாரிசு | நடிகை வைஜெயந்தி மாலா நலம் : மகன் தகவல் | பிளாஷ்பேக்: கருணாநிதியுடன் இணைந்து படம் தயாரித்த எம்ஜிஆர் | அறிக்கையும் இல்லை, கொண்டாட்டமும் இல்லை : இது அஜித் பாலிசி | விதார்த்தை சீனியர் என்றார் அம்மாவாக நடித்த ரக்ஷனா | கரூர் சம்பவத்தால் காலியான குஷி வசூல் | ரிஷப் ஷெட்டியைப் பாராட்டிய ஜூனியர் என்டிஆர் | முதல் வருட நிறைவு தினத்தில் 'தேவரா' படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 50 வயதில் விஜய் பட ஹீரோயினின் திருமண ஆசை |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர் சீனியர் என்ற புதிய நிகழ்ச்சி நாளை முதல் ஒளிப்பரப்பாகிறது. இது கல்லூரி மாணவர்களின் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சி. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதற்கு நடிகை மீனா, சின்னத்திரை நடிகை வாணி போஜன், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றுகிறார்கள்.
தென்னிந்திய சினிமாவின் அழகு தேவதையாக வலம் வந்தவர் மீனா. பட வாய்ப்புகள் குறைந்ததும் சின்னத்திரைக்கு தாவினார். தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்பாகும் முன்னணி சேனல்களில் தொகுப்பாளினியாக, சீரியல் நடிகையாக, நடுவராக பணியாற்றினார். சமீபகாலமாக சின்னத்திரையிலிருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் ஜூனியர் சீனியர் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.