ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்ட ராகேஷ் ரோஷன், தற்போது தன் மகன் ஹிருத்திக்கை கொண்டு காபில் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இப்படம் அடுத்தவாரம் வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார் ராகேஷ். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் எப்போது உங்களது படமான கரண் அர்ஜூன் படம் ரீ-மேக்காகும் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ராகேஷ்... ‛‛கரண் அர்ஜூன் படத்தை நான் எப்போது ரீ-மேக் செய்தாலும் அதில் நிச்சயம் ஷாரூக்கானும், ஹிருத்திக் ரோஷனும் தான் நடிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
கரண் அர்ஜூன் படம் 1995-ம் ஆண்டு ராகேஷ் ரோஷன் இயக்கத்தில், சல்மான் - ஷாரூக் நடிப்பில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.