சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
நடிகை யாமி கவுதம், தனது அடுத்த படமான பாபில் படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். சஞ்சய் குப்தா இயக்கும் காபில் படத்தை ராகேஷ் ரோஷன் தயாரிக்கிறார். இப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி ரிலீசாக உள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில், நடிகர் ஹிருத்திக் ரோஷன் உடனான முதல் சந்திப்பு குறித்த அனுபவம் பற்றி யாசியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான் முதல் முறையாக ஹிருத்திக்கை பார்த்த போது, அவர் சூட்டிங்கிற்கு தயாராகிக் கொண்டிருந்த விதத்தை பார்த்து ஆச்சரியப்பட்டேன். நடுக்கம் மற்றும் பதற்றத்துடன் அவரை பார்த்துக் கொண்டே நின்றேன். முதன் முதலாக அவரிடம் சென்று, ஹாய், நான் யாமி கவுதம் என என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். மிகவும் நடுக்கமாக இருந்தது. அதற்கு பதிலுக்கு அவர், என்னுடன் நடிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக கூறி இருந்தீர்கள். நானும் உங்களுடன் நடிப்பதில் மகிழ்கிறேன் என்றார்.