ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் இப்போதைய பரபரப்பு சச்சின் வரலாற்று படம். இதற்கு முன் டோனி, அசாருதீன் கதைகள் படமாக வந்திருந்தாலும் அந்த படங்களுக்கும் சச்சின் படத்துக்கும் உள்ள வித்தியாசம், இதில் சச்சின் கேரக்டரில் அவரே நடிப்பதுதான். இதனால் படத்துக்கு இப்போதே கடும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதுடன் வியாபாரத்திலும் முந்தைய சாதனைகளை முறியடிக்கிறது. சுமார் 50 கோடியில் தயாராகும் படத்துக்கு 100 கோடி வரை வியாபாரம் பேசப்படுகிறதாம். படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. கோடை விடுமுறையை குறிவைத்து வருகிற ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் வெளியிட இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் 1000 தியேட்டர்களில் வெளிவருகிறது.
சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்; என்ற பெயரில் தயாராகும் இந்தப் படத்தை கார்னிவல் மோசன் பிக்சர்ஸ் சார்பில் ரவி பங்கச்சந்தா தயாரிக்கிறார். ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். தனது வரலாற்று கதையில் தானே நடித்திருப்பது பற்றி சச்சின் கூறியிருப்பதாவது:
‛‛நான் நானாகவே நடிப்பது வித்தியசமான அனுபவமாக இருக்கிறது. விளையாடுவதை விட நடிப்பதுதான் கடினமாக இருக்கிறது. என் வாழ்க்கையை இன்னொரு முறை வாழ்ந்து பார்க்கும் வாய்ப்பை இந்த படம் எனக்கு வழங்கியிருக்கிறது என்கிறார் சச்சின்.