ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராகுல் தொலாக்கியா இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து வரும் படம் ‛ரயீஸ்'. கள்ளச்சாராய டானாக நடித்திருக்கிறார் ஷாரூக். இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அன்றைய தினம் ரயீஸ் படம் ஜன., 25-ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஷாரூக்கானின் இந்த அறிவிப்பு, ஹிருத்திக்கின் அப்பாவும், இயக்குநரும், தயாரிப்பாளருமான ராகேஷ் ரோஷனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதுடன் அவர் மீது கோபத்தை வரவழைத்துள்ளது. ஏனென்றால் அன்றைய தினம் தான் ஹிருத்திக் நடித்துள்ள ‛காபில்' படமும் வெளியாகிறது. முன்னதாக இந்த இரண்டு படங்களும் ஜன.,26-ம் தேதி ரிலீஸாக இருந்தது.
ஷாரூக்கின் இந்த அறிவிப்பு பற்றி ராகேஷ் ரோஷன் கூறியிருப்பதாவது... ‛‛எங்களது காபில் படம் ஜன., 25-ம் தேதி ரிலீஸாவதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர். ஆனால் அன்றைய தினத்திற்கே ஷாரூக்கின் ரயீஸ் படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்திருக்கிறார்கள். நான் 50 வருடமாக இந்த சினிமா துறையில் இருக்கிறேன். வேறு யாருடைய படங்கள் ரிலீஸானால் அன்றைய தேதியில் நான் எனது படத்தை வெளியிட மாட்டேன். கிரிஸ் 4 படம் 2018, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிட இருந்தோம், இப்போது அதையும் மாற்ற உள்ளோம், ஏனென்றால் அன்றைய தேதியில் கூட ஷாரூக், தனது ஒரு படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக கேள்விப்பட்டோம். நான் நினைத்தால் எனது படத்தை பெபிகர், டங்கல் படத்துடன் மோத விட முடியும். முதலில் பிப்ரவரியின் காபில் படத்தை வெளியிட இருந்தோம், ஆனால் ஜனவரியில் எந்த படங்களும் ரிலீஸாகததால் அன்றைய தேதிக்கு படத்தை நாங்கள் மாற்றினோம். ரயீஸ் டிரைலர் வெளியீட்டின் போது எதற்காக படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றினீர்கள் என்று கேள்விகேட்கப்பட்டது, அதற்கு ஷாரூக் நீண்டநாட்களாகவே இந்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய எண்ணியிருந்தோம் என்கிறார். நாங்கள் எங்களது காபில் படத்தை திட்டமிட்டபடி ஜன., 25-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளோம்'' என்று தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.