ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காதலாகி படம் தொடங்கி மேகா, டார்லிங், கத்துக்குட்டி, நவரச திலகம், ஜித்தன்-2, தர்மதுரை என பல படங்களில் நடித்தவர் சிருஷ்டி டான்கே. தற்போது முப்பரிமாணம், பொட்டு, சரவணன் இருக்க பயமேன், காலக்கூத்து, சத்ரு என பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படங்களில் உதயநிதியுடன் நடித்து வரும் சரவணன் இருக்க பயமேன் படத்தை பெரிதாக எதிர்பார்க்கிறாராம் சிருஷ்டி டான்கே.
காரணம் கேட்டால், மேகா படம் என்னை இளைஞர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தது என்றாலும் அதன்பிறகு நான் நடித்த படங்கள் எனக்கு கைகொடுக்கவில்லை. அதற்கு காரணம் படங்களில் தோல்விதான். ஆனால், விஜய சேதுபதியுடன் நான் நடித்த தர்மதுரை படத்தில் என்னுடன் சேர்த்து தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடித்தபோதும், அந்த படத்தில் குறைவான நேரமே தோன்றி நடித்த எனது நடிப்புக்கு ரொம்ப நல்ல பெயர் கிடைத்தது. முக்கியமாக அந்த படத்தில் எனது கேரக்டர் இறந்து விடும். அதனால் அந்த கதாபாத்திரம் ரசிகர்களின் மனதை தொட்டது.
அதையடுத்து இப்போது சரவணன் இருக்க பயமேன் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நானும், ரெஜினாவும் நடிக்கிறோம். இதிலும் கதைப்படி நான் நடித்துள்ள கேரக்டர் இறந்து விடுவது போன்று உள்ளது. அதற்கான காரணம் ரொம்ப அழுத்தமானதாக அமைந்துள்ளது. அதனால், தர்மதுரை படத்தைப்போலவே இந்த படத்திலும் எனது கேரக்டரும், நடிப்பும் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் சிருஷ்டி டான்கே.