ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முழுநேர நாயகனாகி விட்ட சந்தானம் தில்லுக்குத்துட்டு படத்தை அடுத்து நம்பிக்கைக்குரிய கதாநாயகனாகி விட்டார். அதோடு, டூயட் பாடல்களில் மற்ற இளவட்ட நடிகர்களுக்கு இணையாக ஆடி அசத்தி வந்த சந்தானம், தற்போது சண்டை காட்சிகளிலும் தேர்ச்சி பெற்று வருகிறார். அதனால் இதுவரை காமெடி கலந்த காதல் கதைகளில் நடித்து வந்த அவர், அடுத்தபடியாக ஆக்சன், செண்டி மென்ட் கதைகளில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது சர்வர் சுந்தரம் படத்தில் நடித்து முடித்து விட்ட சந்தானம், தான் ஹீரோ ஆவதற்கு அஸ்திவாரம் போட்ட கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை இயக்கிய மணிகண்டன் அடுத்து இயக்கும் படத்திலும் நடிக் கிறார். இந்த படமும் அந்த லட்டு படத்தை போன்றே காதல், காமெடி கதையில் தான் உருவாகிறதாம். கூடவே இப்படத்தில் கொஞ்சம் ஆக்சனையும், செண்டிமென்டையும் கலந்திருக்கிறார்களாம். இதில் சந்தானம் போலீசாக நடிக்கிறார். இதில் சந்தானத்துக்கு ஜோடியாக தனுசுடன் அநேகன் படத்தில் நடித்த அமைரா நடிக்கிறார். இன்று அப்படம் பூஜையுடன் தொடங்குகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை பாஸ் என்ற பாஸ்கரன் படத்தை தயாரித்த வாசன் விசுவல் வென்சர்ஸ் சீனிவாசன் தயாரிக்கிறார்.