ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கோலிவுட்டின், எவர்கிரீன் அமுல்பேபி ஹன்ஷிகா. இவரும், உற்சாகமும் உடன்பிறப்புகள் போலிருக்கிறது. உதடுகளில் புன்னகையும், உள்ளத்தில் மகிழ்ச்சியுமாக வலம் வரும் ஹன்ஷிகா, தன் தீபாவளி கொண்டாட்டம் பற்றி கூறுகிறார்.
தீபாவளி கொண்டாட்டம் எப்படி?
தீபாவளி தான், எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை. நான் தத்து எடுத்து வளர்க்கும், 31 குழந்தைகளுடன் கொண்டாட இருப்பது, மனதுக்கு பெரிய மகிழ்ச்சி. ரங்கோலி போடுவது மற்றும் விளக்குகள் ஏற்றுவது என, ஒரே குஷி மயமாக இருக்கும். வெடி வெடிப்பது பிடிக்காது; அந்த சத்தம், மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும்; மாசுபடிதலுக்கு காரணமாக இருக்கும். அதனால், அதை தவிர்த்திடுவோம். மற்றபடி, பாட்டு, டான்ஸ், விளையாட்டு மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவது என, குழந்தைகள் சந்தோஷம், மனதளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும், அவர்களுடன் தீபாவளி கொண்டாடுவதற்காக, நானும் காத்திருக்கிறேன்.
உங்க விருப்பமான ஸ்வீட்ஸ்?
எனக்கு ஸ்வீட்ஸ் அதிகமாக பிடிக்காது; வீட்டில் தீபாவளி அன்று, குழந்தைகளுக்கும் சேர்த்து, 35 பேருக்கு, ஆலு பூரி, அம்மா செய்வாங்க; எல்லாரும் விரும்பி சாப்பிடுவோம்; அந்த நாளே, எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
மூன்றாவது முறையாக, ஜெயம் ரவியுடன், போகன் படத்தில் நடிப்பது பற்றி?
நானும், ரவியும் சேர்ந்து நடிக்கும் படங்கள், வெற்றி அடைந்துள்ளன. ரசிகர்களுக்கும், எங்களை பிடித்திருக்கிறது. போகன் படம், விரைவில் வெளி வர உள்ளது; ரொம்ப வித்தியாசமான படம். அரவிந்த்சாமியுடன், முதன்முறையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது, ரொம்ப ஜாலியான டீம்; விரைவில் படத்தின், டீசர் வெளிவர உள்ளது.
உங்கள் ரசிகர்கள் பற்றி?
குறிப்பாக சொல்லனும்னா, தமிழ் ரசிகர்கள் மாதிரி, வேற எங்குமே நான் பார்த்ததில்லை; பெஸ்ட் ரசிகர்கள். புதுமுகங்களை வரவேற்பதும் சரி; திறமையானவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதும் சரி; ரொம்ப நல்ல ரசிகர்கள், தமிழ் ரசிகர்கள். எப்போதும், அவர்கள் விரும்பும் மாதிரியான படங்கள் தர விரும்புகிறேன்.
சமீப காலமாக, தமிழ் சினிமாவில், புதுமுகங்கள் படையெடுப்பு அதிகமாக உள்ளதே?
தமிழ் சினிமா எப்போதுமே, புதுமுகங்களுக்கு சிறப்பான வரவேற்பை தரும். இப்போது வரும் புதுமுகங்கள், திறமைசாலிகளாக உள்ளனர். இந்த விஷயத்தில், ஒரு சிலர் பெயர்களை மட்டும் கூறுவது சரியாக இருக்காது. புதுமுகங்கள் அதிகமாக வருவதை நினைத்து கவலைப்பட மாட்டேன். போட்டி இருந்தால் தான், நம் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும்.
இப்போதெல்லாம், ரொம்ப, செலக்டிவான படங்களில் தான் நடிக்கிறீங்க போல?