ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த ஆண்டு வெளியான அகிலா முதலாம் வகுப்பு படத்தில் நாயகனாக அறிமுகமானவர் விகாஷ். அவர் தற்போது நவீன் மணிகண்டன் இயக்கியுள்ள முன்னாள் காதலி என்ற படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக வாசவி என்ற தெலுங்கு நடிகை நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கிறது. இந்த நிலையில், இவர்கள் வைத்துள்ள முன்னாள் காதலி என்ற தலைப்பினை நடிகர் ஜெய் ஆகாஷ் பதிவு செய்து வைத்திருப்பதாக தெரியவர, அப்படக்குழுவினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுபற்றி விசாரித்தபோது, விகாஷ் நடித்துள்ள இந்த படத்தை தொடங்கும்போது முன்னாள் காதலி என்ற டைட்டீலை சேம்பரில் பதிவு செய்தார்களாம். அப்போது இதே டைட்டீலை யாராவது முன்பே பதிவு செய்திருந்தால் ஒரு வாரத்தில் தெரிவிப்போம் என்று சொன்னவர்கள், அதையடுத்து எந்த தகவலும் அவர்களுக்கு தெரிவிக்கவில்லையாம். அதனால், முன்னாள் காதலி டைட்டீல் ஓகேவாகி விட்டதாக நினைத்து படப்பிடிப்பையும் நடத்தி விட்டு போஸ்டர் அடித்து படத்திற்கு விளம்பரம் செய்ய முற்பட்டிருக்கிறார்கள்.
அப்போதுதான், முன்னாள் காதலி டைட்டீலை ஏற்கனவே நடிகர் ஜெய் ஆகாஷ் பதிவு செய்து வைத்திருப்பதாக கூறியிருக்கிறார்கள். அதனால் இப்போது முன்னாள் காதலி டைட்டீலை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அப்படக்குழுவினர், எனக்குள் ஒரு காதலி என்று டைட்டீலை மாற்ற பரிசீலித்து வருகின்றனர்.