ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தை மாரடைப்பால் காலமானார். பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்தார். சினிமாவில் மட்டுமல்லாது, ஐபிஎல்., கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். இவரது தந்தை சுரேந்தர ஷெட்டி. இவர் தண்ணீர் நுழைய முடியாத தொப்பிகளை தயாரித்து வருகிறார். சுரேந்தர ஷெட்டி மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை திடீரென சுரேந்தர ஷெட்டிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். பின்னர் அவரது உடல் அஞ்சலிக்காக அந்தேரியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. சுரேந்தர ஷெட்டி இறக்கும் தருவாயில் மகள்கள் ஷில்பா ஷெட்டி, ஷமிதா ஷெட்டி, ஷில்பாவின் கணவர் ராஜ் குந்த்ரா உள்ளிட்ட குடும்பத்தார் அருகில் இருந்து கவனித்து வந்தனர்.
ஷில்பா ஷெட்டியின் தந்தை சுரேந்தர ஷெட்டியின் மறைவு செய்தியை கேட்டு பாலிவுட் பிரபலங்களும், தொழிலதிபர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.