ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹிந்தி திரையுலகில் 20 வருடத்திற்கு மேல் முன்னணியில் இருக்கும் ஹீரோக்களில் அமீர்கானும் ஒருவர். இவர் தற்போது நிதேஷ் திவாரி இயக்கத்தில் "டங்கல் " படத்தில் மல்யுத்த வீரராக மாவீரர் போகத்தாக நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குநர் விஜய் கிருஷ்ணா இயக்கத்தில் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் ‛தக் ஆப் இந்துஸ்தான் எனும் படத்தில் நடிக்கிறார் அமீர். இப்படத்தில் அமிதாப் பச்சன் உடன் இணைந்து அமீர் கானும் நடிக்க உள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமிதாப் பச்சனிடம் அமீர் கானுடன் நடிப்பதை பற்றி கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த அமிதாப் கூறியதாவது....."எனக்கு அவருடன் நடித்தது மிகவும் உற்சாகமாக இருந்தது. அமீர் கான் தான் சிறந்த நடிகர், நான் இல்லை. அமீர் கானின் நடிப்பையும் அவர் படங்களையும் நான் ரசித்து பார்ப்பேன். அமீர் கான் மிகவும் திறமையான நடிகர் " என்று புகழ்ந்துள்ளார்.
தற்போது அமீர் கான் நடித்து வரும் "டங்கல்" படம் இந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழு தெரிவித்து உள்ளது. இதைத்தெடர்ந்து ‛தக் ஆப் இந்துஸ்தான் படம் 2018 தீபாவளி திருநாள் அன்று வெளியிட இருக்கிறார்கள்.