ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகம் இப்படி ஒரு வெளியீட்டுத் தேதியை சந்தித்திருக்க முடியுமா என்பது கேள்விதான். தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அதற்கு ஒரு நாள் முன்னதாகவே 3 படங்கள் வெளியீடு என்பது இந்தக் காலத்தில் மிகப் பெரிய விஷயம். பொங்கல் விடுமுறையில் வேண்டுமானால் இப்படி ஏதாவது தொடர் விடுமுறை நாட்கள் வரலாம். ஆனாலும், மாட்டுப் பொங்கல் அன்றும் காணும் பொங்கல் அன்றும் அனைவரும் விடுமுறை விடமாட்டார்கள். வரும் அக்டோபர் 10ம் தேதி ஆயுதபூஜை, 11ம் தேதி விஜயதசமி, 12ம் தேதி மொஹரம் என அரசு விடுமுறை நாட்கள் சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களைத் தொடர்ந்து வருகிறது.
அதனால் 7ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ரெமோ', விஜய்சேதுபதி நடித்துள்ள 'றெக்க', பிரபுதேவா நடித்துள்ள 'தேவி' ஆகிய படங்களை வெளியிட ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன. 'ரெமோ, தேவி' ஆகிய படங்களின் சென்சார் முடிந்துவிட்டதால் அவர்கள் வெளியீட்டுத் தேதியை அறிவித்துவிட்டார்கள். 'றெக்க' சற்றுமுன்னர் தான் சென்சார் சென்று யு சான்று பெற்றிருக்கிறது.
'ரெமோ' படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பலத்துடன் வளர்ந்து வரும் நேரத்தில் ரிஸ்க் எடுத்து பெண் தோற்றத்திலும் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். அவருடைய இந்தத் துணிச்சலை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். ஏற்கெனவே, பாடல்களுக்கும், டிரைலருக்கு மிகப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
'றெக்க' படத்தில் முதன் முறையாக ஆக்ஷன் ஹீரோவாக மசாலாப் படத்தில் நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி. இப்படி ஒரு படத்தில் அவர் நடித்திருப்பது ஆச்சரியம்தான். படத்தில் அவருடைய வழக்கமான 'யதார்த்த டச்' இருந்து படமும் வித்தியாசமாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. பாடல்களும், டிரைலரும் வெளியாகி இன்னும் ஒரு வாரம் கூட முடியவில்லை.
'தேவி' படத்தை மூன்று மொழிகளில் எடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால், டிரைலரும், போஸ்டர்களும் அதை ஒரு ஹிந்திப் படம் போலவே ஞாபகப்படுத்துகிறது. பிரபுதேவாவும் தமிழில் நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இந்தக் கால இளைஞர்களுக்கு பிரபுதேவா ஏறக்குறைய புதுமுகம்தான். உண்மையான நேரடித் தமிழ்ப் படமாக எடுத்திருந்தார்கள் என்றால் இப்படமும் போட்டியில் இருக்கலாம்.
'ரெமோ, றெக்க, தேவி' மூன்று படங்களுமே ஒன்றுக்கொன்று வித்தியாசமான முயற்சியில் அக்டோபர் 7ம் தேதி போட்டியில் கலந்து கொள்ளும் படங்கள். ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று 2 நாட்களிலேயே 20 கோடி வசூல் என யார் எழுத வைக்கப் போகிறார்கள் என்பதற்கு ஒரு வாரம் வரை காத்திருப்போம்.