ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தனுஷ் நடித்த 3 படத்தை இயக்கியவர் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆர்.தனுஷ். அந்த படத்தில்தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் அந்த படம் அனிருத்துக்கு நல்லதொரு தொடக்கமாக அமைந்தது. ஆனால் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாதது ஐஸ்வர்யாவுக்கு பெரிய திருப்புமுனையை கொடுக்கவில்லை. இருப்பினும் பின்னர் கெளதம் கார்த்தியை நாயகனாக வைத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா தனுஷ். முந்தைய படத்தில் நாயகனாக நடித்த தனுஷ், அவரது இரண்டாவது படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது தனது மூன்றாவது படத்தை இயக்குவதற்கு தயாராகி விடடார் ஐஸ்வர்யா தனுஷ். பெண்களை மையப்படுத்திய கதையில் உருவாகும் இந்த படம் டிசம்பர் மாதம் தொடங்குகிறது. ஆனால் இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்கிற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. அதேசமயம் இப்படத்தில் தனுஷ் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் அது வை ராஜா வை படத்தை விடவும் பெரிய ரோலோக இருக்கும் என்கிறார்கள்.