பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
பிரபல பாலிவுட் நடிகரான ரித்தேஷ் தேஷ்முக் நடிப்பில் நேற்று பான்ஜோ படம் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து அவர் சரித்திர படமான மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி படத்தில் நடிக்க உள்ளார். இந்தப்படத்தில் சல்மான் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் அதை, ரித்தேஷ் உறுதி செய்துள்ளார்.
இதுப்பற்றி ரித்தேஷ் கூறியிருப்பதாவது... ‛‛சத்ரபதி சிவாஜி படத்தில் சல்மான் நடிப்பது எங்கள் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். படத்தில் அவருடைய ரோல் என்னவென்று தெரியாமலே நடிக்க சம்மதம் சொன்னார். என் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகவும், எங்களுக்குள் உள்ள நட்பின் காரணமாக அவர் இப்படத்தில் நடிக்கிறார்'' என்று கூறியுள்ளார்.