ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
‛அப்பா' படத்தை தொடர்ந்து சமுத்திரகனி நடிப்பில் உருவாகி வரும் படம் ‛கொளஞ்சி'. தனராம் சரவணன் என்ற புதியவர் இயக்க, ‛மூடர்கூடம்' நவீன் தயாரிக்கிறார். சமுத்திரகனி ஜோடியாக நடிகை சங்கவி நடிக்கிறார். இப்படம் பற்றி இயக்குநர் தனராம் சரவணன் கூறியதாவது... ‛‛காலத்தின் சூழலுக்கு ஏற்றபடி அப்பா தன்னை எப்படியெல்லாம் மாற்றி கொள்ள வேண்டும், மகன் எப்படி தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை பேசப்போகிற படம் இது. கொளஞ்சி என்ற கேரக்டரை மையப்படுத்தி தான் படத்தின் முழுகதையும் நகரும். சமுத்திரகனி கண்டிப்பான அப்பாவாக, கடவுள் நம்பிக்கை இல்லாதவராக படம் முழுக்க கறுப்பு சட்டை உடையணிந்து நடிக்கிறார். அவரது மனைவியாக சங்கவி நடிக்கிறார். இந்த கேரக்டரில் நடிகை சினேகாவை தான் நடிக்க வைக்க எண்ணினோம், ஆனால் அவர் கர்ப்பமாக இருந்ததால் சங்கவியை நடிக்க வைத்தோம். படத்தில் நிறைய சிறுவர்களை நடிக்க வைத்துள்ளோம். அப்பா நிசாத்தின் நடிப்பின் பெரிய அளவில் பேசப்படும், குறிப்பாக அவரது காமெடி ரசிகர்களை கவரும். படம் பார்க்கும்போது ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்களின் கடந்தாகால நிகழ்வுகளை நினைத்து பார்ப்பார்கள். அப்படியொரு படமாக கொளஞ்சி இருக்கும் என்கிறார் தனராம் சரவணன்.