அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா |
'கபாலி' திரைப்படம் வெளிவந்து ஒரு மாத காலம் ஆகிவிட்டது. வெளிநாடுகளில் இப்படத்தின் திரையிடல் கடந்த வாரத்துடன் முடிந்துவிட்டது. அமெரிக்காவில் கடந்த ஞாயிறு அன்று கூட சில திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் திரையிட்ட வகையில் 'கபாலி' படம் இதுவரை சுமார் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் சுமார் 33 கோடி ரூபாயும், மலேசியாவில் 20 கோடி, யு.கே.வில் 3 கோடி, ஆஸ்திரேலியா, இலங்கை, அரேபியா, மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் மொத்தமாக சுமார் 45 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்கிறார்கள். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் 'பாகுபலி' படத்தின் வசூலை 'கபாலி' படத்தால் முறியடிக்க முடியவில்லை. 'பாகுபலி' படம் அமெரிக்காவில் சுமார் 55 கோடியை வசூலித்துள்ளது. ஆனால், 'கபாலி' படத்தால் 33 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்க முடிந்துள்ளது.
'கபாலி' படம் வெளியீட்டிற்கு முந்தைய வியாபாரம், பிந்தைய வசூல் என மொத்தமாக சுமார் 400 கோடி ரூபாயை வசூலித்திருக்கலாம் என்கிறார்கள். படத்திற்கான செலவு சுமார் 100 கோடி ரூபாய் போனாலும், மீதமுள்ள வசூல் தொகை 300 கோடி ரூபாய் இருக்கிறது. அதில் வினியோகஸ்தர்களுக்கான பங்குத் தொகையில் நிச்சயம் லாபம் வந்திருக்கும். சில சிறிய ஊர்களில் மட்டும் படம் எதிர்பார்த்த வசூலைப் பெற முடியாததுதான் 'கபாலி' படத்தைப் பற்றிய பின்னடைவு. மற்றபடி படத்தை வாங்கியவர்களில் பலர் லாபத்தைப் பார்த்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். ஆனால், படம் பற்றிய முழுமையான, துல்லியமான வசூல் விவரம் வெளிவருமா என்பதும் சந்தேகம்தான்.