ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'அவசரப்பட்டால், சினிமாவில் வளர்ச்சி அடைய முடியாது' என்பதில் தெளிவாக இருக்கிறார் மெட்ராஸ் நாயகி கேதரின் தெரசா. 'நல்ல கதைகள் கிடைத்தால் நடிக்கலாம்; அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் காத்திருக்க தயார்' எனக் கூறி வந்த அவருக்கு, இப்போது, ஓரளவு வாய்ப்புகள் தேடிவரத் துவங்கியுள்ளன. தமிழில் ஆர்யா, விஷ்ணு விஷால் ஆகியோருக்கு ஜோடியாகவும், தெலுங்கில், ராணா போன்ற நடிகர்களுக்கு ஜோடியாகவும். சில படங்களில் நடித்து வருகிறார். 'இந்த படங்கள் வெளியானதும், எனக்கு பாராட்டு கிடைப்பதுடன், மேலும் பல படங்கள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது' என, எதிர்பார்ப்புடன் உள்ளார், தெரசா.