Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சைத்தான் - விஜய் ஆண்டனிக்கான படம்! -டைரக்டர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

23 ஜூலை, 2016 - 12:35 IST
எழுத்தின் அளவு:
Saithan-in-Vijay-Antony-film-says-Pradeep-Krishnamoorthy

பிச்சைக்காரனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்து வரும் மெகா படம் சைத்தான். இந்த படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வருகிறார். தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், வருகிற செப்டம்பர் மாதம் சைத்தான் திரைக்கு வருகிறது. இந்த படம் குறித்து இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தினமலர் இணையதளத்திற்கு அளித்த பேட்டி...




சைத்தான் எந்தமாதிரி கதையில் உருவாகியிருக்கிறது?


இது ஒரு ஆக்சன் டிராமா. சைக்கோ திரில்லர் படம். விஜய் ஆண்டனி நடித்த முதல் படம் நான். அதன்பிறகு அந்த மாதிரியான கதைகள் அவருக்கு கிடைக்கவில்லை. அதனால் சைத்தான் கதையை நான் சொன்னபோது அதில் ரொம்பவே இம்ப்ரஸ் ஆகிவிட்டார். அதோடு அந்த கதாபாத்திரமாகவே மாறி வாழ்ந்திருக்கிறார். அதனால் சைத்தான் படம் எதிர்பார்த்ததை விடவும் பிரமாதமாக வந்திருக்கிறது. இந்த படமும் பிச்சைக்காரனுக்கு இணையாக மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது.


அப்படியென்றால் விஜய் ஆண்டனியை மனதில் கொண்டுதான் இந்த கதையை எழுதினீர்களா?


கண்டிப்பாக, விஜய் ஆண்டனி படத்துக்குப்படம் மெருகேறிக்கொண்டே வருவதைப்பார்த்தபோது கூடிய சீக்கிரமே அவர் முன்னணி ஹீரோவாகி விடு வதற்கான அறிகுறிகள் தென்பட்டது. அதோடு, கதாபாத்திரங்களாக தன்னை முழுமையாக மாற்றிக்கொள்ளும் ஆற்றலும் அவரிடம் இருந்ததை உணர்ந்தேன். அதனால்தான் ஒரு சைக்கோ திரில்லர் கதை ரெடி பண்ண வேண்டும் என்றபோது அவராகவே எனது மனதிற்குள் வந்து குடியேறிக்கொண்டார். அதன்பிறகு சைத்தான் பட ஸ்கிரிப்ட்டும் சூப்பராக வந்தது.


விஜய் ஆண்டனி படங்கள் என்றாலே சீரியசாகவே இருக்கிறதே. இந்த படமும் அப்படித்தானா?


இந்த படமும் சீரியஸ் பிலிம்தான். அதனால் காமெடியை அதிகமாக சேர்க்க முடியவில்லை. ஆனபோதும் ஆங்காங்கே கதையோடு கலந்த காமெடி காட்சிகள் உள்ளது. அதனால் அதை உணர்ந்து நல்ல பர்பாமென்ஸ் கொடுத்துள்ளார் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன் எப்படி அவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றதோ அதேபோல் இந்த சைத்தான் படமும் அவருக்கு முக்கியமான படமாக இருக்கும்.


சைத்தான் படத்தில் முன்னணி நடிகர்-நடிகைகள் யாரெல்லாம் நடித்துள்ளனர்?


ஒய்.ஜி.மகேந்திரன், சாருஹாசன், மீராகிருஷ்ணன், ஆடுகளம் முருகதாஸ், அருந்ததி நாயர் உள்பட பலர் நடித்துள்ளனர். மீராகிருஷ்ணன் விஜய் ஆண்டனியின் அம்மாவாகவும், அருந்ததி நாயர் கதாநாயகி ஆகவும் நடித் துள்ளனர்.


மேலும், பிச்சைக்காரன் தெலுங்கிலும் சூப்பர் ஹிட்டானதால், சைத்தான் படத்தை தமிழைப்போலவே ஆந்திராவிலும் பெரிய அளவில் ரிலீஸ் செய்கிறோம். அதனால் முதலில் தமிழை மட்டுமே மனதில் கொண்டு ஒர்க் பண்ணி வந்த நிலையில், இப்போது தெலுங்கிற்கும் சேர்த்து ஒர்க் பண்ணி வருகிறேன். அதற்கான டப்பிங் வேலைகளும் நடக்கிறது. அதனால்தான் சைத்தானை திட்டமிட்டபடி வெளியிட முடியாமல், செப்டம்பருக்கு ரிலீஸ் தேதியை மாற்றி விட்டோம்.


இவ்வாறு சைத்தான் டைரக்டர் பிரதீப் பதிலளித்தார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in