ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
நடிகைகள் பிரியங்கா சோப்ராவும், தீபிகா படுகோனேவும் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளதை தொடர்ந்து இப்போது அனைவருக்கும் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் ஆசை வந்து விட்டது. சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது நடிகர் அர்ஜூன் கபூரிடம், ஹாலிவுட் படங்களில் நடிக்கும் ஆசை உள்ளதா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இப்போது வரை, இங்கு எனக்கென ரசிகர்களை உருவாக்க முயன்று வருகிறேன். ஒரு நடிகனாக பாதுகாப்பான இடத்திற்கு உயர்வது மிக அவசியம். இங்கேயே நான் சாதிக்க வேண்டியது நிறைய உண்டு என நினைக்கிறேன். புதிதாக எங்கும் போய் மேற்கொண்டு எதையும் செய்ய நான் நினைக்கவில்லை. இதுவரை ஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என எந்த எண்ணமும் இல்லை. ஹாலிவுட் படங்களில் நடிக்க மாட்டேன் என சொல்ல மாட்டேன். ஒருவேளை யாராவது வந்து கேட்டால், அது பற்றி யோசித்து முடிவு செய்வேன் என்றார். தற்போது நடிகர் அர்ஜூன் கபூர், ஹால்ப் கேர்ள்பிரண்ட் படத்தின் சூட்டிங்கில் பிசியாக இருந்து வருகிறார்.