மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சமீபகாலமாக, தமிழ் சினிமாவிலிருந்து காணாமல் போயிருந்த 'மிர்ச்சி' சிவா, அட்ரா மச்சான் விசிலு படத்தின் மூலம், மீண்டும் வருகிறார். இந்த முறை, பவர் ஸ்டார் சீனிவாசனையும், துணைக்கு அழைத்து வந்துள்ளார். சிவா படங்களில், கிண்டல், கேலிக்கு குறைச்சலிருக்காது. இந்த படமும், அதே டிராக் தான். ஹீரோக்களுக்கு, பெரும் பக்கபலமாக விளங்கும் ரசிகர் மன்றங்களை கலாய்ப்பது தான், இந்த படத்தின் கதை. இதில், மிகப் பெரிய நடிகராக வலம் வரும் பவர் ஸ்டார் சீனிவாசனின், தீவிர ரசிகராக, சிவா நடித்துள்ளார். இந்த படம் வெளியானதும், பெரிய ஹீரோக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்படலாம் என்கிறது, கோலிவுட் வட்டாரம்.