மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
ரஞ்சித் எழுதி இயக்கிய கபாலி திரைப்படம், ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளிவரவுள்ளது பெரும்பாலும் படப்பிடிப்பு மலேஷியா நடைபெற்றது. இந்தப் படம் ஒரே நேரத்தில் சிங்கப்பூர், இந்தோனேஷியா மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளில் மலாய் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளிவரவுள்ளது. மலேசிய தொழிலதிபர் அப்துல் மாலிக்கின் மாலிக் ஸ்ட்ரீம்கள் புரொடக்சன்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூஷன், இப்படத்தை மலாய் மொழியில் வெளியிடவுள்ளது.
ரஜினிகாந்த் ரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில் மலேஷியாவில் உள்ள காரணத்தினால், அவர்களை உற்சாகப்படுத்த மாலிக் ஸ்ட்ரீம்கள் புரொடக்சன்ஸ், ‛கபாலி ரன்' என்ற ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கபாலி ரன் நிகழ்ச்சி ஜூலை 31-ம் தேதி அன்று நடைபெறுகிறது. வேடிக்கை ரன்-ஆக நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் 5 கிலோமீட்டர் தூரம் ஓட வேண்டும். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 5 கிலோ மீட்டர் தூரத்தை முழுமையாக கடக்கும் முதல் ஐந்து பேருக்கு ரொக்க பணம் சிறப்பு பரிசாக வழங்கப்பட இருக்கிறது. இதுதவிர இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைவருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் பொறிக்கப்பட்ட பதக்கம், கபாலி சிறப்பு பனியன்கள், பேக் உள்ளிட்ட பல பரிசுகள் வழக்கப்படவுள்ளது.
மேலும் விபரங்கள் அறிய அருகில் உள்ள முகவரியை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்... http://www.beestorm.com.my/kabalirun