ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பாலிவுட்டில் பயோபிக் சீசன், அதாவது பிரபலங்களின் வாழ்கை வரலாற்றில் நடிப்பது அதிகமாகி வருகிறது. குறிப்பாக விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை படங்கள் அதிகமாகி வருகின்றனர். மில்காசிங், மேரிகோம், அசாரூதின், தோனி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்களை தொடர்ந்து இப்போது குத்துச்சண்டை ஜாம்பவான் கேப்டன் ஹவா சிங்கின் வாழ்க்கை படமாக உருவாக இருக்கிறது.
குத்துச்சண்டையில் தேசிய அளவில் பல பதக்கங்களும், ஆசியா உள்ளிட்ட சர்வதேச அளவில் பல போட்டிகளில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் கேப்டன் ஹவாச சிங். குத்துச்சண்டை வீரர்களான விஜேந்தர் சிங், அகில் குமார் ஆகியோர் ஹவா சிங்கிடம் பயிற்சி பெற்றவர்கள். 2000-மாவது ஆண்டில் ஹவா சிங் மறைந்தார். தற்போது இவரது வாழ்க்கையை சினிமாவாக எடுக்க உள்ளனர். இதில் கேப்டன் ஹவா சிங்காக நடிகர் ஜான் ஆபிரஹாம் நடிக்க இருக்கிறார்.
இதுகுறித்து ஜான் ஆபிரஹாம் கூறியுள்ளதாவது... ‛‛கேப்டன் ஹவா சிங்கின் குடும்பத்தார் என்னை வந்து சந்தித்தனர். நான் இன்னும் இந்தப்படத்தில் கமிட்டாகவில்லை, ஆனாலும் இப்படத்தை இப்போதே எண்ணி மிகவும் ஆவலாய் உள்ளேன் என்று கூறியுள்ளார்.
ஜான் ஆபிரஹாம் தற்போது ‛டிஷ்யூம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை 29ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.