பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
எப்படிப்பட்ட ரோலையும் கஷ்டப்பட்டு நடித்து அசத்திவிடுபவர் பாலிவுட்டின் பிக் பி என கூறப்படும் அமிதாப் பச்சன். இதுவரை பல விதமான வித்தியாசமான ரோல்களில் நடித்த அமிதாப், இப்போது 102 வயது முதியவராக நடிக்க உள்ளார். ஆல் இஸ் வெல் படத்தின் தோல்விக்கு பிறகு இயக்குநர் உமேஷ் சுக்லா, '102 நாட் அவுட்' என்ற படத்தை இயக்க உள்ளார். இதில் அமிதாப் பச்சனும், பரேஷ் ராவலும் முக்கிய ரோலில் நடிக்க இருக்கின்றனர்.
இதுகுறித்து உமேஷ் சுக்லா கூறியிருப்பதாவது... ''102 நாட் அவுட் படத்தின் ஷுட்டிங் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இது ஒரு குடும்ப பாங்கான படம். அமிதாப் 102 வயது முதியவராக நடிக்க இருக்கிறார். படத்தின் பெரும்பகுதி மும்பையில் படமாக்கப்பட இருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை, அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்'' என்று கூறியுள்ளார்.