ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த படம் திரிஷா இல்லன்னா நயன்தாரா. இந்த படத்தில் கயல் ஆனந்தி முக்கிய நாயகியாக நடித்திருந்தார். அந்த படம் ஹிட்டானபோதும், ஆபாச வார்த்தைகள் மற்றும் ஏ சான்றிதழ் பெற்ற படத்தில் நடித்து விட்டேனே என அந்த படம் வெளியான நேரத்தில் பீல் பண்ணிக்கொண்டிருந்தார் ஆனந்தி. ஆனபோதும் மீண்டும் ஜி.வி.பிரகாஷ் நடித்த எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்திற்கு கால்சீட் கேட்டபோது கதையை கேட்டு விட்டு விவகாரமான டயலாக்குகள் இல்லை என்று கமிட்டானார்.
இந்நிலையில், அதே ஜி.வியின் இன்னொரு புதிய படத்திலும் கயல் ஆனந்தியே ஒப்பந்தமாகியிருந்தார். இதனால் ஜி.வி.பிரகாஷ், கயல் ஆனந்திக்கு சிபாரிசு செய்கிறார் என்று செய்திகள் வெளியாகின. இதுகுறித்து அவரிடம் மீடியாக்கள் கேட்டபோது, ஆனந்தி என் படங்களில் நடிப்ப தற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கதைக்கு அவர் பொருத்தமாக இருப்பதால் டைரக்டர்கள்தான் அவரை ஒப்பந்தம் செய்து வருகின்றனர் என்று கூறினார்.
இந்த நிலையில், ஆனந்தியுடன் நடிப்பது தொடர்ந்தால் இன்னும் பெரிய அளவில் கிசுகிசுக்கள் பரவி விடும் என்று உசாரான ஜி.வி.பிரகாஷ், தனது புதிய படத்தில் ஆனந்திக்கு பதிலாக நிக்கி கல்ராணியை ஒப்பந்தம் செய்யச்சொல்லி விட்டாராம். டார்லிங் படத்தில் நடித்த ராசியான நடிகை என்பதோடு, தன்னை அவரோடு இணைத்து எந்தவொரு கிசுகிசுவும் வெளியாகவில்லை என்பதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளாராம் ஜி.வி.பிரகாஷ்.