ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இதுவரை டைரக்டர் ஷங்கரின் படங்களில் சிவகார்த்திகேயன் நடித்ததில்லை. என்றபோதும், ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார் ஷங்கர். அப்போது அவர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மற்றும் ரெமோ படத்தை பற்றியும் பெருமையாக பேசினார்.
அப்போது ஷங்கர் பேசுகையில், சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிரமிக்கும் வகையில் உள்ளது. மாஸ் ஹீரோவாகிக்கொண்டு வரும் அவர், இன்னும் ஒரு ஐந்து வருசம், பத்து வருடம் அப்படியே போகலாம். என்றாலும் அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த ரெமோ படத்தில் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார். இது பாராட்ட வேண்டிய விசயம். காரணம், ஒரு பெண்ணாக மாறி நடிப்பது அத்தனை எளிதான விசயமல்ல. தனது உடலளவில் மட்டுமின்றி மனதளவிலும் அதற்கு தயாராக வேண்டும். அதோடு, மேக்கப் மற்றும் உடைகளை அணிந்து கொண்டு தயாராவதற்கு அதிக நேரம் பொறுமையுடன் இருக்க வேண்டும். அதையெல்லாம் செய்து இந்த படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
மேலும் இந்த படத்தில் பி.சி.ஸ்ரீராம் சார் ஒளிப்பதிவாளராக இருக்கிறார். அவர் இந்த படத்திற்கு கிடைத்திருப்பது பெரிய ப்ளஸ். படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற டெக்னீசியன்களும் திறமையானவர்கள் ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து செய்யக்கூடியவர்கள். அந்த வகையில், கடின உழைப்பில் உருவாகியிருக்கும் இந்த ரெமோ படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்த விழாவை இளைஞர்களாக சேர்ந்து ரொம்ப நன்றாக புதுமையாக செய்துள் ளனர். எனது 2.ஓ படத்திற்கும் இப்படி செய்ய வேண்டும் என்கிற ஆசை ஏற் பட்டிருக்கிறது என்றார்.