ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சசி இயக்கிய பூ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் எஸ்.எஸ். குமரன். முதல் படமே அவரை பேச வைத்தது. அதையடுத்து சற்குணம் இயக்கத்தில் விமல் நடித்த களவாணி படத்தில் இன்னும் சூப்பர் ஹிட் பாடல் களை கொடுத்து பேசப்பட்டார். ஆனால் அதையடுத்து அவர் இசையமைத்த விருந்தாளி, நெல்லு படங்களின் பாடல்கள் பேசப்படவில்லை. விளைவு, அதை யடுத்து அவருக்கு இசையமைக்க படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் தேனீர் விடுதி, கேரள நாட்டிளம் பெண்களுடனே -என்ற இரண்டு படங்களை இயக்கி இசையமைத்து தயாரித்தார் எஸ்.எஸ்.குமரன். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றியடையவில்லை.
இந்தநிலையில், இயக்கம், தயாரிப்புக்கு முழுக்குப்போட்டு விட்ட அவர், பட்டதாரி -என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். மதுரை மண்வாசனையில் உருவாகியுள்ள இந்த படத்துக்கும் சூப்பர் ஹிட் பாடல்களாக கொடுத்துள்ள எஸ்.எஸ்.குமரன், மேலும் சில படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அதோடு, இரண்டு படங்களை இயக்கி, தயாரித்து கையை சுட்டுக்கொண்ட அவர், இனிமேல் நான் அந்த பாதைக்கு செல்லப்போவதில்லை. முழுநேர இசைய மைப்பாளராக முடிவெடுத்து விட்டேன் என்கிறார்.