ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பாசறையில் இருந்து வந்தவர் அட்லி. ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் இவர் இயக்கிய முதல் படமான ராஜாராணி ஹிட்டானது. அதையடுத்து விஜய்யை இயக்கிய தெறி படமும் ஹிட்டாக அமைந்தது. அதனால் இரண்டு படங்களிலேயே முன்னணி இயக்குனர் அந்தஸ்தை பெற்று விட்டார் அட்லி. இதற்கிடையே அவரது முதல் படம் மெளனராகம், இரண்டாவது படம் சத்ரியன் படங்களின் சாயலில் உள்ளது என்று விமர்சனங்கள் எழுந்தபோதும், இரண்டு படங்களுமே வெற்றி பெற்று விட்டதால் இப்போது அந்த விமர்சனங்கள் அடங்கி விட்டன.
மேலும், தெறி படத்திற்கு பிறகு இரண்டு படங்களை தயாரிக்கும் அட்லி, தான் அடுத்து இயக்கும் படத்தைப்பற்றி இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனபோதும் அவர் தெறி-2 விஜய்யை வைத்து மீண்டும் இயக்குவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் அதுபற்றி விஜய், அட்லி தரப்பில இருந்து எந்த ரியாக்சனும் இல்லை. இந்த நிலையில், அட்லி அடுத்தபடியாக மகேஷ்பாபுவை இயக்கயிருப்பதாக தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.
விஜய் எப்படி தெலுங்கில் வெளியாகும் மகேஷ்பாபு, பிரபாஸ், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட சில நடிர்களின் படங்களை தவறாமல் பார்த்து வருகிறாரோ அதேபோல் விஜய்யின் படங்களை மகேஷ்பாபு தவறாமல் பார்த்து விடுவாராம். அப்படி தெறி படத்தைப்பார்த்தபோது அவருக்கு மிகவும் பிடித்து விட, அட்லியை தொடர்பு கொண்டு வாழ்த்தினாராம். அதன்பிறகு மகேஷ்பாபுவை அட்லி சந்தித்தபோது ஒரு படம் பண்ணலாம் என்று அட்லியிடம் கூறியுள்ளாராம் மகேஷ்பாபு.
ஆனால் அது தெறி படத்தின் ரீமேக்கா? இல்லை வேறு கதையா? என்பது தெரியவில்லை. அதேசமயம், விஜய்யின் கத்தி தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிப்பது போன்று விஜய்யின் தெறி ரிமேக்கில் மகேஷ்பாபு நடிப்பதற்கே நிறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.