ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கிய முதல் தமிழ் படம் ‛மின்னலே. மாதவன், அபாஸ், ரீமான் சென் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. இதேப்படம் ஹிந்தியில் ‛ரெஹ்னா ஹே தேரே தில் மெயின் என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டது. கெளதம் மேனன் இயக்க, மாதவன், சைப் அலிகான், தியா மிர்சா நடித்திருந்தனர். அங்கும் இப்படமும், பாடல்களும் ஹிட்டாக அமைந்தது. இந்நிலையில் இப்படத்தை மீண்டும் ரீ-மேக் செய்யப்போவதாக கூறியுள்ளார் தயாரிப்பாளர் வாசு பாக்நானி.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... ‛‛ரெஹ்னா ஹே தேரே தில் மெயின் படம் ரீ-மேக் செய்ய தகுதியான படம். இப்படத்தை நிச்சயம் நான் மீண்டும் ரீ-மேக் செய்வேன். இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாகிவிட்டது, ஆனாலும் இன்றும் இப்படத்தின் பாடல்களை மக்கள் ரசித்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.