ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஹீரோயிசமில்லாத கதைகளில் நடிக்கத்தொடங்கிய விஜயசேதுபதியும் சமீபகாலமாக வழக்கமான ஹீரோ ரூட்டுக்கு வந்து விட்டார். அதேசமயம் நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகள் நடிக்கிறபோது கொஞ்சம் விட்டுக்கொடுக்கத்தான் செய்கிறார். மேலும் தனது படங்களில் சீனியர் நடிகர் நடிகைகள் நடித்தால் அவர்களுக்கு வெயிட்டான காட்சிகள் கொடுக்குமாறும் கேட்டுக்கொள்ளும் விஜயசேதுபதி, காட்சிகள் நன்றாக வரவேண்டும் என்பதற்காக தன்னுடன் நடிக் கும் அனைத்து கலைஞர்களுமே சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்.
அதோடு, விஜயசேதுபதி படங்களைப் பொறுத்தவரை காமெடி அதிகமாக இருந்தபோதும், அம்மா செண்டிமென்ட், தங்கச்சி செண்டிமென்ட் அதிகமாக இடம்பெற்றதில்லை. அந்த வகையில், தற்போது அவர் தயாரித்து நடித்து வரும் றெக்க படத்தில் முதன்முறையாக தங்கச்சி செண்டிமென்டுக்கு இடம் கொடுத் துள்ளார். அந்த வகையில், இதுவரையில்லாத அளவுக்கு பாச உணர்வுகளை வெளிப்படுத்தி இந்த றெக்கையில் நடித்துள்ள விஜயசேதுபதி, அடுத்தபடியாக ஒரு படத்தில் அம்மா செண்டிமென்ட் கதையிலும் நடிக்கப்போகிறாராம்.