ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காமெடி கிங் கவுண்டமணிக்கு நேற்று 77வது பிறந்த நாள். பொதுவாக அவர் பிறந்த நாள் கொண்டாடுவதில்லை. அவரது பிறந்த நாள் யாருக்கும் தெரியாது. சில வருடங்கள் அவருக்கே நினைவிருக்காது. பிறந்த நாள் வாழ்த்து சொன்னால், ''ஏம்பா நான் என்ன கக்கனா காமராஜரா எனக்கு போயி பிறந்து நாள் வாழ்த்து சொல்ற. அட நீ வாழ்த்து சொல்லி நான் வாழ்ந்துட போறனாக்கும். வாழ்த்து சொல்லாட்டி செத்துறப்போறனாக்கும். நான் காச வாங்கிட்டு நடிக்கிற கூத்தாடிப்பய, நீ அதை காசு கொடுத்து பார்க்குற பைய பேசமாக புள்ளைங்க பிறந்த நாளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்து அதுங்கள சந்தோஷப்படுத்துப்பா'' என்பார்.
ஆனால் சமீபகாலமாக பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் பெருகிவிட்டதால் கவுண்டமணியின் பிறந்த நாள் அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. அதனால் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து விட்டார்கள். அட இந்த வாழ்த்து இம்சை தாங்க முடியலப்பா என்று வழக்கமாக அலுவலகம் வருகிறவர் கூட நேற்று வர யோசித்தார். ஆனாலும் சில பணிகண் இருந்ததால் வந்தவரை அங்கு காத்திருந்தவர்கள் மடக்கி பிடித்து பொன்னாடைக்கள் அணிவித்து, பூச்செண்டு கொடுத்து வாழ்த்திவிட்டனர்.
அவர்கள் வாழ்த்தை மட்டும் ஏற்றுக் கொண்டவர் அப்படியே வீட்டுக்கு எஸ்கேப்பாகி விட்டார். போனையும் சுவிட்ச் ஆஃப் செய்து விட்டார். வீட்டில் அவரது குடும்பதினருடன் எளிய முறையில் பிறந்த நாளை கொண்டாடினார். சில முக்கியமானவர்களின் டெலிபோன் வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொண்டார்.