ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தின் மூலம் அறிமுமானவர் காஜல் அகர்வால். தெலுங்கில் வெளிவந்த மகதீரா படத்தின் மூலம் முன்னணி நடிகை ஆனார். தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் காஜல், அதிகபட்சமான கிளாமர் காட்சிகளிலோ, முத்தக் காட்சியிலோ நடித்ததில்லை. முதன் முறையாக இந்திப் படத்தில் லிப்லாக் முத்தக் காட்சியில் நடித்துள்ளார்.
தீபக் திஜோரி இயக்கும் தோ லப்சான் கி கஹான் என்ற இந்திப் படத்தில் காஜல் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ரன்தீப் ஹோடா நடிக்கிறார். இது ஒரு காதல் கதை. கதைப்படி ஒரு காட்சியில் தன்தீப்புக்கு காஜல் லிப்லாக் முத்தம் கொடுத்துள்ளார். இந்த காட்சி மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் தீபக் திஜோரி கூறியதாவது: காஜல் அகர்வால் இதுவரை லிப்லாக் முத்தக் காட்சியில் நடித்ததில்லை. அதனால் நான் அவரை வற்புறுத்தவில்லை. என்றாலும் கதையையும், காட்சியின் சூழலையும் விளக்கி இந்த இடத்தில் லிப்லாக் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். அவர் முதலில் தயங்கினார். தென்னிந்திய சினிமாவில் எனக்கென்று ஒரு இமேஜ் இருக்கிறது. அது போய்விடுமே என்றார். நான் அவருக்கு தென்னிந்திய படங்களில் வந்த முத்தக் காட்சிகள் பற்றியும் அதில் நடித்தவர்கள் பற்றியும் எடுத்துக்கூறி அவரது பயத்தை போக்கினேன். அதன் பிறகு நடிக்க ஒப்புக் கொண்டார். கதையிலும், கேரக்டரிலும் அவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தால் ஒரே டேக்கில் நடித்தார். என்கிறார் தீபக்.