ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினி முருகன் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எகிறி கிடக்கிறது. அதன்வெளிப்பாடாக இப்போது ஹாலிவுட் மேக்கப் மேன், பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு என பிரம்மாண்ட கலைஞர்களுடன் ஒரு பிரம்மாண்ட படத்தை நடித்தும், தயாரித்தும் வருகிறார் சிவகார்த்திகேயன். ரெமோ என்ற பெயரில் உருவாகி வரும் இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
சிவகார்த்திகேயன் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான ரோலில் அதுவும் இரண்டு ரோலில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜூன் இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடக்கிறது. செப்டம்பரில் படம் வெளியாகலாம் என தெரிகிறது.