ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஹரி இயக்கத்தில் பரத் நடித்த 'சேவல்' படத்தில் தமிழுக்கு வந்தவர் பூனம் பாஜ்வா. அதையடுத்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்தார். ஆனால், அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் மார்க்கெட்டில் பின்தங்கியே இருந்து வந்த பூனம்பாஜ்வா, பின்னர் கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்காமல் ஆம்பள, ரோமியோ ஜூலியட் படங்களில் கேரக்டர் நடிகையாக உருவெடுத்தார். தற்போது குண்டு குதிரை, போகி படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நேரத்தில், பூனம்பாஜ்வாவுக்கு மும்பையில் திருமணம் நடந்து விட்டதாகவும், அவர் அதை மறைத்து நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இதை இப்படியே விட்டால் இருக்கிற மார்க்கெட்டும் அவுட்டாகி விடும் என்று உடனடியாக அதற்கு மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளார் பூனம்பாஜ்வா. அந்த செய்தியில், எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. சமீபத்தில் எனது தங்கைக்குத் தான், திருமணம் நடைபெற்றது. அதைதான் எனக்கு திருமணமாகி விட்டதாக மாற்றி விட்டார்கள். மேலும், எனக்கு திருமணம் நடக்கும்போது ரசிகர்களுக்கு அறிவித்து விட்டே செய்து கொள்வேன். திருமணத்தை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று தெரிவித்துள்ளார்.