Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டி.எம்.சௌந்தரராஜனுக்கு ஏற்பட்ட அவமரியாதை

24 மார், 2016 - 16:04 IST
எழுத்தின் அளவு:
Disrespect-for-TM-Soundarajan

மறைந்த பின்னணி பாடகரான டி.எம்.சௌந்தரராஜனுக்கு இன்று (24-3-2016) 94-ஆவதுபிறந்தநாள். மிகப்பெரிய ஜாம்பவானான டி.எம்.சௌந்தரராஜனுக்கு தமிழ் சேனல்களால் ஏற்பட்ட அவமரியாதை பற்றிய தகவல் ஒன்று அவரது பிறந்தநாளான இன்று வெளியாகி உள்ளது. இது டி.எம்.எஸ். ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.


என்ன நடந்தது? திரைப்படக் கல்லூரி மாணவரான விஜயராஜ் என்பவர், பிரபல பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் டாகுமெண்டரியை உருவாக்கி இருக்கிறார். 2002 ஆம் ஆண்டு தொடங்கி 2013 ஆம் ஆண்டு வரையில் சுமார் 12 வருடங்கள் டி.எம்.எஸ். உடன் பயணித்து, தொலைக்காட்சியில் தொடராக ஒளிபரப்பும்வகையில் 150 எபிசோட் எடுத்து முடித்துள்ளார்.


இமயத்துடன் என்று தலைப்பு வைக்கப்பட்ட இந்த டாகுமெண்டரியில், டி.எம்.எஸ். பிறந்து வாழ்ந்த வளர்ந்த இடங்கள், 80-க்கும் மேற்பட்ட கலைஞர்களை டி.எம்.சௌந்தரராஜனே நேரடியாக அவரவர் இருப்பிடத்திற்கே சென்று கலந்துரையாடிய நிகழ்ச்சியின் அபூர்வமான பதிவுகள், டி.எம்.எஸ். பாடிய அற்புதமான - அபூர்வமான பாடல் காட்சிகள் - அவரைப்பற்றிய அபூர்வ தகவல்கள் அடங்கியுள்ளன.


டி.எம்.எஸ். பற்றிய மிக முக்கியமான ஆவணமாக கருதப்படக்கூடிய இந்த டாகுமெண்டரியை ஒளிபரப்ப நேரம் ஒதுக்கிக் கேட்டு, பிரபல தொலைக்காட்சிகளை அணுகி இருக்கிறார் விஜயராஜ். இமயத்துடன் தொடரின் டிரைலரையும் அவர்களுக்குப் போட்டுக்காட்டி, ஒளிபரப்புவதற்கு வாய்ப்புக் கேட்டு அலைந்து கொண்டிருக்கிறார். டி.எம்.எஸ். பற்றிய செய்திப்படத்தை ஒளிபரப்ப எந்த சேனலும் முன்வரவில்லையாம்.


உண்மையிலேயே இது டிஎம்எஸ்.,க்கு ஏற்பட்ட அவமரியாதை தான்.!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in