ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் முன்னணி ஸ்டாரான அமீர்கான், சமீபத்தில் சகிப்புத்தன்மை தொடர்பாக பேசி சர்ச்சையில் சிக்கி கொண்டார். அமீரின் பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தன. இந்நிலையில், 'கி அண்ட் கா' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள நடிகை கரீனா கபூரிடம், அமீர்கானின் சகிப்புத்தன்மை பேச்சு குறித்து கேள்விகேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கரீனா, ''அமீர் பேசியது எனக்கு தவறாக தெரியவில்லை. அவர் தன்னுள் இருக்கும் பயத்தை தான் வெளிப்படுத்தினார். தன்னுடைய மனைவி தன்னிடம் சொன்ன விசயத்தை தான் சொன்னார். இதன்மூலம் அவர் யாரையும் புண்படுத்தவில்லை. இதுதொடர்பாக லட்சக்கணக்கான பேர் விமர்சனம் செய்துள்ளார்கள். எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய மக்களாக இந்தியர்கள் உள்ளனர்'' என்று கூறியுள்ளார்.
பால்கி இயக்கியுள்ள 'கி அண்ட் கா' படத்தில், கரீனாவுடன் அர்ஜூன் கபூர் நடித்துள்ளார். வேலைக்கு செல்லும் மனைவிக்கும், வீட்டு வேலை பார்க்கும் கணவனுக்கும் இடையே உள்ள உணர்வுகளை படமாக்கியுள்ளார் பால்கி. இப்படம் ஏப்ரல் 1ம் தேதி வெளியாக உள்ளது.