ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பால்கி இயக்கத்தில் அர்ஜூன் கபூர், கரீனா கபூர் நடித்துள்ள படம் கி அண்ட் கா. இப்படத்தில் அர்ஜூன் வீட்டை கவனித்து கொள்ளும் கணவனாகவும், கரீனா வேலைக்கு செல்லும் மனைவியாகவும் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்.1ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது. தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகள் நடந்து வருகிறது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அர்ஜூன் கபூரிடம், பாலிவுட் நடிகர்களில் எந்த நடிகர் ஹவுஸ் ஹஸ்பண்ட்டாக இருக்க சரிப்படுவார் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அர்ஜூன்கபூர், 'எனக்கு தெரிந்தவரை, என்னை தவிர வேறு யாரும் அப்படியில்லை என்று சொல்லலாம். நான் உண்மையிலே ஹோம்லி டைப்பான ஆள். அதேசமயம், வருண் தவானும் இந்த லிஸ்ட்டில் சேருவார் என்று நினைக்கிறேன். அவருக்கு சிக்கன் மிகவும் பிடிக்கும், அதை அவரும் விரும்பி சமைப்பார், ஆகையால் அவர் ஒரு நல்ல 'ஹவுஸ் ஹஸ்பண்ட்' என்று கூறியுள்ளார்.