ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கெத்து படத்துக்கு பிறகு உதயநிதி நடித்து வரும் படம் மனிதன். என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அஹமத் இயக்குகிறார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு பிறகு உதயநிதியுடன் ஹன்சிகா நடிக்கிறார். இவர்கள் தவிர பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மதி ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம். காதல், காமெடி, ரொமான்ஸ் கலந்த கலவை. 50 சதவிகித படம் நீதிமன்றத்தின் பின்னணியில் நடக்கிறது. உதயநிதி இளம் வழக்கறிஞராக நடிக்கிறார். இதற்காக பிரமாண்டமான நீதிமன்ற அரங்கத்தையும் கதை நிகழும் வட சென்னை மண்ணடி தெருவையும் கலை இயக்குனர் செல்வகுமார் அமைத்துள்ளார். னமும் நூற்றுக் கணக்கான துணை நடிகர்கள் கலந்து கொண்டு நடித்த மண்ணடி தெரு காட்சிகளும், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், குமாஸ்தாக்கள் என வேடமிட்ட நூற்றுக் கணக்கான துணை நடிகர்களுடன் நீதிமன்ற காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட படப்பிடிப்புகள் பொள்ளாச்சி பகுதியில் நடந்தது. தற்போது சென்னையில் நீதிமன்றம், மற்றும் மண்ணடி தெரு ஷெட்டிலும் நடந்து வருகிறது. மூன்றாவது கட்டமாக சாலக்குடியில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.